Sunday 18 January 2015

ஐ - மெகாஹிட்- அதுக்கும் மேல

ஐ னா அழகு, தலைவன் னு எல்லாரும் அர்த்தம் கண்டுபிடிக்க,
பழிவாங்கல் கதையை தனக்கே உரிய பிரம்மாண்ட பாணியில் விக்ரமுடன் இணைந்து பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் ஷங்கர்.

கதை:

பாடி பில்டர் விக்ரம் மிஸ்டர் இந்தியாவாக ஆசைப்படுகிறார், மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொள்கிறார். விக்ரமிடம் போட்டியில் தோற்றவர் முதல் எதிரி.

விளம்பர மாடல் எமி மீது விக்ரமுக்கு அவ்வளோ ஆசை, அவர் போட்டோவை எல்லாம் சேர்த்து வச்சிருக்கார். எமி நடிக்கிற விளம்பர பொருளையெல்லாம் வாங்கி வச்சிருக்கார்.

வில்லன் உபேன் படேல் எமி கூட நடிக்கிற மாடலா வர்றார், அவருக்கு எமி மேல ஒரு கண்ணு, ஆனா எமிக்கு அவரை பிடிக்கலை, கடுப்பான எமி யை கழற்றிவிட்டு எமியோட விளம்பர லைப் காலி பண்றாரு.

எமி விக்ரமை கூட சேர்த்துகிட்டு சீனா ல விளம்பரத்துல நடிக்கப் போகுது, நடிப்பு வராத விக்ரம்க்கு (ஸாரி விக்ரம்) நடிப்பு வரணும்னு லவ் பண்றதா பொய் சொல்லுது பாப்பா, அப்புறம் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுது. ரீல் லவ் ரியல் லவ்வா மாறுது.

இதுக்கு நடுவுல மேக்கப்மேன் திருநங்கைக்கு விக்ரம் மேல காதல். பூச்சிக்கொல்லி குளிர்பான விளம்பரத்துல நடிக்காததால விக்ரம் மேல விளம்பர கம்பெனி முதலாளிக்கு கோபம்.

எமி ய காதலிக்கிற டாக்டர் சுரேஷ்கோபிக்கு விக்ரம் மேல கோபம். வில்லன்கள் எல்லாரும் சேர்ந்து ஊசி போட்டு விக்ரம் உருவத்தை அகோரமா மாத்திடுறாங்க, விக்ரம் 'அவங்களை எப்படி பழி வாங்குறாரு  இதான் "ஐ"

பலம்:

* விக்ரமின் கடின உழைப்பு, நடிப்பில் ஒவ்வொரு சீனிலும் தெரிகிறது.
நடிக்கத் தெரியாம நடிக்கிற சீன்ல கூட விக்ரம் சூப்பர்
கூனன், பாடி பில்டர், எல்லாமே பக்கா.

ஒளிஓவியம்:

பி.சி. ஸ்ரீராம் கேமரா படத்தின் பெரிய பலம், எல்லா காட்சிகளுமே அழகு.
சீனா காட்சிகளும் பாடல்களும் கண்களுக்கு விருந்து.

டெக்னாலஜி:

கிராபிக்ஸ் எல்லாமே சூப்பர். மெர்சலாயிட்டேன் பாடல் எல்லோரையும் மெர்சலாக்கும்.

இசை:

பிண்ணனி இசை படத்தின் பலம், பாடல்கள் வீடியோவுடன் பார்த்து ரசிக்கலாம்.

காமெடி:

பவர் ஸ்டார், சந்தானம் ஜிம் காமெடி, எந்திரன் 2 பவர் காமெடி பக்கா. சந்தானம் குணச்சித்திர நடிகராகிட்டாரு.

வசனம்:

என்னைக் கொல்லப் போறியா?
அதுக்கும் மேல..

சும்மா தண்ணி காட்டுனேன்

கமல் பேன்ஸ் ரத்தம் குடுக்குறாங்க, விஜய் பேன்ஸ் அரிசி குடுக்குறாங்க, நீ மேடத்துக்காக முடிய குடுக்க மாட்டியா.

ஜான் யூ ஆர் கான்..

சண்டைக்காட்சிகள் எல்லாமே அருமைதான், ஆனால் கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.

மொத்தத்தில் "ஐ" விக்ரம், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் காம்பினேஷனில் ஆஸ்கார் பிலிம்ஸ் படைத்திருக்கும் பொங்கல் விருந்து.

"உண்மை, உழைப்பு, உயர்வு"
இதில் உழைப்புக்குப் பதிலா விக்ரம்&ஷங்கர் டீம் பேரை சப்ஸ்டியூட் பண்ணிக்கலாம்.

வீணா போனவனுங்க எத்தனை மார்க் போட்டா என்ன? விளங்காதவனுங்க என்ன ரேட்டிங் குடுத்தா என்ன?

தியேட்டர்ல போய் பாருங்க.
உள்ளூர் தியேட்டரில் உலக சினிமா "ஐ"

மெய்யாலுமே மெர்சலாகிடுவீங்க..

No comments:

Post a Comment