Thursday, 26 January 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #1


பதிவுலகில் ஆயிரம் பதிவுகள் ! (மொக்கை போடுவதிலும் சாதனை ) வெளியிட்டு சாதனை படைத்த மொக்கை பதிவர் செந்தில்.சிபி உடன் நமது ட்விட்டர் நண்பர்கள் போட்ட மொக்கைகள் , மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் என்ற பதிவாக (மொக்கையாக) வெளியிடுகிறோம். மொக்கை கேள்விகள் கேட்ட நண்பர்களுக்கு அசராமல் தன் மொக்கை நடையில் பதிலளித்த சிபி க்கு நன்றிகள்....மொக்கையின் முதல் பாகம் இதோ !                                                                                                                                                    1.சி பி என்பதன் விளக்கம் ?

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி ( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C இனிஷியல்ல சேர்த்துட்டேன் .. ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )

. 2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்?

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம்

3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்..

4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?


பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில் 17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களூக்கும் எழுதி உள்ளேன்5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.. ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்..6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்..7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி, மகள் என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்8.அட்ராசக்க என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?நான் கவுண்டமணி ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே பிலாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றா மொக்கை என திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ்9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்..10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?


நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள்

நன்றி ! ! !                                                                                                                           
அனைத்து ட்விட்டர் நண்பர்கள்.....                                                                              
 அட்ராசக்க வலைத்தளம்                                                                       
                                                                                                                                       தொடரும்....
                     
                                                                                                                     

Saturday, 14 January 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்- விமர்சனம்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
தமிழ் சினிமாவில் ரஜினிக்குப் பிறகு மிகப்பெரிய சக்தியாக கருதப்படும் விஜய், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் காம்பினேஷனில் வெளிவந்துள்ள முதல் படம்.
தமிழின் முதல் மல்டிஸ்டாரர் படம், முண்ணனி தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றிய படம் என்பதால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது நண்பன்....
மனதுக்குப் பிடித்ததை மட்டுமே செய்யும் பஞ்சவன் பாரிவேந்தனாக விஜய், பயந்தாங்கொள்ளி சேவற்கொடி செந்திலாக ஜீவா, போட்டோக்ராபியை விரும்பும் வெங்கட்ராம கிருஷ்ணனாக ஸ்ரீகாந்த், சைலன்சர் ஸ்ரீவத்சனாக சத்யன், காலேஜ் ப்ரின்சிபால் விருமாண்டி சந்தனமாக சத்யராஜ் (செல்லமாக வைரஸ்) என கதாபாத்திரத் தேர்வு கச்சிதம்....
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள், சத்யராஜ் நடத்தும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார்கள், கல்வியியல் நடைமுறைகளை விஜய் சற்று அதிகமாகவே விமர்சிக்கிறார், முதல் சந்திப்பிலேயே இவருக்கும் சத்யராஜ்க்கும் முட்டிக்கொள்கிறது..
இவர்கள் 3 பேரும் இணைந்து அடிக்கும் லூட்டிகளும், அரட்டைகளுமே நண்பன்...சத்யனையும், சத்யராஜையும் இவர்கள் படுத்தும் பாடு அப்பாடா...
இடையில் இலியானாவுடன் காதல் டூயட் என ரவுண்ட் கட்டி அடிக்கிறார் விஜய்....
காலேஜ் முடிந்ததும் விஜய் காணாமல் போகிறார், காணாமல் போன நண்பனை மற்ற இரண்டு நண்பர்கள் தேடிப் பிடிப்பதே நண்பன் படத்தின் கதை....
அறிமுகமாகும் சீனில் தொடங்கி இறுதி வரை சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார் விஜய்.
சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் .என அனைவரின் நடிப்பும் அசத்தல்.
சத்யனின் ஸ்டேஜ் காமெடி இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடியாக இருக்கும்....மிகச்சிறப்பான நடிப்பு
ஹாரிஸ் இசையில் அஸ்கு லஸ்கா, என் பிரண்டைப் போல யாரு மச்சான், எந்தன் கண்முன்னே, இருக்கானா, ஹார்ட்டிலே பேட்டரி என அனைத்தும் ஆல் இஸ் வெல்...
பாடல்களை படம் பிடித்த விதத்தில் ஈர்க்கின்றனர் இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும்....
ஷங்கர், கார்க்கியின் வசனங்களும் , ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவும், பராகான்,ஷோபியின் நடனஅமைப்பு என அனைத்திலும்  அனைவரையும் கவர்கிறான் நண்பன்.....
வெற்றிக்குப் பின்னாடி போகாதே ! உனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ, கஷ்டப்பட்டு உழை, வெற்றி தானா தேடி வரும்....இந்த வசனம் " நண்பன்" படத்திற்கும் சாத்தியமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல....
அமைதியான நடிப்பு, அருமையான நடனம், குறும்புத்தனம் என கலந்து கட்டி அடிக்கிறார் இளைய தளபதி...
சுருக்கமா சொல்லணும்னா "தலைவா யூ ஆர் கிரேட்" தான்...
மொத்தத்தில் நண்பன் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய ஆல் இஸ் வெல் சினிமா.
இந்த இனிய நாளில் அனைவருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
நண்பன் பொங்கல்- ஆல் இஸ் வெல் பொங்கல்.......


Wednesday, 4 January 2012

மன அழுத்தத்தை போக்கும் சில வழிமுறைகள்

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் எனவே மன அழுத்தத்தில் இருந்து வாழ்க்கையை பாதுகாக்க சில வழிமுறைகள் ….

தேவையற்ற விவாதம் வேண்டாம்

மன அழுத்தம் ஏற்படுத்தும் சில சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது.

மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் காட்டு கத்தல் கத்தி துணையை அச்சுறுத்தக்கூடாது.

தனிமையை நாடுங்கள்

மனஅழுத்தமான சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்கள் துணைக்கும் நீங்கள் ஏன் டிஸ்டென்ஸ் மெய்ன்டெய்ன் செய்கிறீர்கள் என்று தெரியும்.வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள்

உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை லேசாக்கி உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி

கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள்

எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை

என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.