Sunday, 8 April 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #436. எதாவது பத்திரிகையிலோ அல்லது வார இதழிலோ வேலை பார்த்திருக்கிறீரா ?


ல்லை.. ஆரம்பத்துல ஆனந்த விகடன்ல பணி ஆற்ற அடங்காத ஆர்வமும், தணியாத தாகமும் இருந்துச்சு.. அப்புறம் ஒரு தடவை ஹாய் மதன் எழுதுன கட்டுரைல பத்திரிக்கையில் பணி ஆற்ற நினைப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை படைப்புத்திறனை அடகு வைக்க வேண்டி இருக்கும், ஒரு குறுகலான பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றார்.. அப்போ இருந்து அந்த ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. ஹாய் மதன் ஆனந்த விகடனை விட்டு விலகும்போதும், குமுதத்தில் ஒரு வருடம் தீவிரமா பணி ஆற்றிய போதும் இந்த கருத்தை சொன்னார்..


37. வெறும் எழுத்து மட்டுமே படைப்பாளிக்கு சோறு போடுமா ?


மிழ் நாட்டு எழுத்தாளர்கள்க்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.. ஆனானப்பட்ட ராஜேஷ்குமாரே மாலை மதி நாவலுக்கு ரூ 5000 தான் வாங்கினார்.. சுபா சூப்பர் நாவல்-ல் ரூ 2000 மட்டுமே வாங்கினார்.. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு சம்பளமாக ரூ 1 லட்சம் தான் வாங்கினார்.. ஆனாலும் இதையும் தாண்டி சுஜாதா, பாலகுமாரன் என சம்பாதிச்சவங்களும் இருக்காங்க .. காமெடி ஸ்கிரிப்ட் மட்டுமே எழுதி எஸ்வி சேகர், கிரெசி மோகன், விவேக் என நல்லா சம்பாதிச்சவங்க இருக்காங்க.. மைன்ஸ் பிளஸ் எல்லாம் இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா எழுத்து சோறு போடாது, சாம்பார், ரசம் எதுவும் ஊத்தாது.. சும்மா ஒரு புகழ் போதையை, பரவலான அறிமுகத்தை தரும்.. அதனால நாம பொழப்பை பார்க்க ஏதாவது வேலைக்கு போறதுதான்  நல்லது.


38. படைப்புலக பிரபலங்களுடனான சுவையான நினைவுகள் எதாவது இருந்தால்
பகிருங்களேன் ?    by @iyyanars

சுவையான சந்திப்புகள் பல உண்டு.. அவற்றை எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் தொடரில் சொல்றேன். மனதை காயப்படுத்திய ஒரு சம்பவம் சொல்றேன்.. குமுதத்தில் ஒரு கட்டுரைப்போட்டி வெச்சிருந்தாங்க.. அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சமயம்.. அந்த செக்கை வாங்க சென்னை சென்றேன்.. போனதுதான் போறோம்.. பாக்யராஜ், சுபா, பி கே பி ஆகிய பிரபலங்களை சந்திக்கலாம் என கிளம்பினேன்..
ந்த இடத்துல தான் ஒரு தப்பு பண்ணுனேன்.. அதாவது எந்த வித அப்பாயிண்ட்மெண்ட்டோ முன் தகவலோ இல்லாமல் போனேன்.. இருந்தாலும் மற்ரவர்களை சந்தித்து விட்டேன், ஆனால் பி கே பி தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தார்.. என்ன மேட்டர்? நீங்க யாரு>?  என்றார்.. அட்வான்ஸா அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி ட்டு இன்னொரு நாள் வாங்க  என அனுப்பிவிட்டார்..
அது 2 வகையான பாடங்களை எனக்கு கற்றிக்கொடுத்தது
1. யாராக இருந்தாலும் சந்திக்க வரும் முன்பே தகவல் தருவது,
2. பிரபலங்களை சந்திக்க ஆர்வம் கொள்வதை கட்டுப்படுத்துவது.


39. .உங்கள் இளமையின் ரகசியம் ?

னக்கென்னமோ 35 வயசு ஆன மாதிரியும், ஆனா ஆள் பார்க்க 25 வயசுப்பையனா இருக்கற மாதிரியும் என்ன ஒரு விதண்டாவாதமான கேள்வி ராஸ்கல்ஸ்.... (கேட்டது சீனியர் என்றால் கூட ஒரு அண்ணே போட்டுக்கொள்க)
தினமும் காலை 5 மணீக்கு எழுந்து வாக்கிங்க், ஜாகிங்க் 4 கிமீ , பின் யோகா கொஞ்ச நேரம், பிராண யாமம் கொஞ்ச நேரம், இதெல்லாம் உடம்புக்கு. பின் மனசுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஈரோடு வ உ சி பார்க் மைதானத்தில் பிளஸ் டூ கேர்ள்ஸ் எக்சசைஸ், ஜாக்கிங்க் வேடிக்கை பார்த்தல் ( அதுல என்ன புத்துணர்வு ர்ன கேல்வி கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் ) வெறும் வயிற்றில்  1 லிட்டர்  தண்ணீர் குடிப்பேன்.. அரை வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வெச்சிருப்பேன். சைவம் தான்.. நோ டீ நோ காபி.. நோ டிரிங்க்ஸ் இன்க்லூடிங்க் டொரினோ, கொக்கோ கோலா லைக் பாட்டில்களீல் அடைக்கப்பட பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை..
இரவில் 7.30 டூ 8 மணீக்கு டின்னர் முடிச்சுட்டு 9 மணீக்கு அல்லது 10, மணீக்கு தூங்கிடுவேன்.. நல்ல தூக்கம் ஆரோக்யம்

40. .மற்றவர்களின் ஆதரவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் , உங்கள் மனைவியின் ஆதரவு எப்படி ? பதிவுலக வாழ்க்கைக்குத்தான் சார் ?   by @arivukkarasu

ஹி ஹி ஹி ஒரு ரகசியம் சொல்றேன்.. பதிவுலகம், ட்விட்டர் எதுவும் ஹோம் மினிஸ்டருக்கு தெரியாது.. தெரிஞ்சா டின் கட்ட்டிடுவாங்க.. போய் பொழப்பைப்பாருய்யா அப்டிம்பாங்க.. இந்த மேட்டர் வெளில தெரிய வேணாம். ஹிஹி

41.  எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?  by @iammano

நாம பலரை நெகடிவ்வா திங்க் பண்றப்ப நம்மை அப்படி யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதா? அதெல்லாம் டேக் இட் பாலிசி தான்.. கழுகு எனும் வலைத்தளம் தான் என்னை முதன் முதலாக தாக்கி பதிவிட்ட தளம்.. அதன் பின் சாம் ஆண்டர்சன், ஃபிலாசபி பிரபாகரன்,ரஹீம் கஸாலி, புரட்சிக்காரன், உட்பட என்னை பதிவுலகில் தாக்கி பதிவு போட்டவர்கள் மட்டும் 34 பேர்.. பதிவுகளின் எண்ணிக்கை 67.. அது போக மற்ற தளங்களீல், கூகுள் பஸ்ஸீல், ஃபேஸ் புக்கில் தாக்கியவர்கள் 87 பேர்..  எல்லாம் டேக் இட் ஈசி தான்..


42. சினிமா விமர்சகர் ஆகக் காரணம் என்ன ?

நான் பேசிக்கலா ஒரு சினிமா பைத்தியம்.. (பொதுவாவே பைத்தியமோ?) அதனால என்னை மாதிரி தண்டமா யாரும் காசு செலவு பண்ணிடக்கூடாதுன்னு ஒரு வார்னிங்க் தர்றதுக்காக விமர்சனம் எழுதறேன்.. அதுக்காக யாராவது மக்களின் பணத்தை மிச்சம் பண்ணிய மாமணி என்ற பட்டமோ, விருதோ வழங்கினா அதை கலைஞர் போல் எந்த விதமான கூச்சமோ நாச்சமோ இல்லாமல் வாங்கிக்க தயாரா இருக்கேன்..

43. நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க தலைவரே:-). by @arattaigirl

ட்விட்டர்க்கு வரவேணாம்னு நேரடியா சொன்னா லாங்க் லீவ் எடுத்துக்கறேன்.. ஒய் திஸ் கொலை வெறி?அரசியல்வாதி ஆகனும்னா காக்கா பிடிக்கனும், கால்ல விழனும்.. இது நமக்கு ஆகாது.. ஆஃபீஸ்ல பிரமோஷனுக்காகவோ, இன்கிரீமெண்ட்டுக்காகவோ பல் இளிச்சே பழக்கம் இல்லாதவன் நான்.. எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்.

44. பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவதற்கு இன்லாந்து லெட்டர் யூஸ் பண்றீங்களா? இல்லை போஸ்ட் கார்டா ?  by @rajanleaks

இது நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வியா இருந்தாலும் சிரியசாவே பதில் சொல்லிடறேன்.. எந்த ஜோக்ஸ் எழுதுனாலும் ஒன்லி கார்டுதான்.. அதுதான் சீப் அண்ட் பெஸ்ட். கதை எழுதும்போது. ஏ 4 ஒயிட் சீட்ல ஒன் சைடு மட்டும் எழுதி ஒரு கவர்ல வெச்சு 5 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவேன்.. 4 பேப்பர் = 20 கிராம் = 5 ரூபா ஸ்டாம்ப்..  பல்க்கா 200 ஜோக்ஸ் அனுப்ப வேண்டி வந்தா கூரியர் பெஸ்ட்.. 10 ரூபா தான் ஆகும்..

45. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா? by @NattAnu

ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான் வந்தேன்.. நான் உள்ளே வந்து ஒரு வருஷம் தான் ஆகுது.. அதனால 4 வருடங்கள்க்கும் அதிகமாக இங்கே உள்ள சீனியர்களோட கம்ப்பேர் பண்ண முடியாது.. ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அப்டினு ஒரு இடம் பிடிச்சதா உணர்றேன்.. அதுவே போதும்./. என் நோக்கம் சிரிக்க வைப்பது.. எண்ட்டர்டெயின் மெண்ட்.. அவ்ளவ் தான்...!!!!!
.
.
.


(பதிவரின் பேட்டி இத்துடன் முடிகிறது.
அடுத்தொரு பதிவருடன் மறுபடி சந்திப்போம்.!!!)

.
.
.

4 comments:

 1. //எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்.//

  ஹே ஹே ஹே......ம்

  ReplyDelete
 2. நல்லா தான் இருக்கு, ஆனா ஏன் அடிக்கடி வரமாட்டேன்கிறீங்க. அடிக்கடி எழுதுங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. இதோட முடிஞ்சுட்டுதா? சிபி வித் தட்சிணா கலக்கல் காம்பினேசன். வாழ்த்துக்கள் மச்சி. அன்புடன் திரு

  ReplyDelete
 4. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  Best Regarding.

  ReplyDelete