Saturday 12 March 2016

பிச்சைக்காரன் விமர்சனம்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான்  எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்கள், மற்றும் தலைப்புகளால் மக்களின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்,

சொல்லாமலே, டிஷ்யூம், பூ, 555, படங்களின்  தனித்துவமிக்க இயக்குனர் சசியும் இணைந்திருக்கும் படமே பிச்சைக்காரன்...

எவருமே வைக்க விரும்பாத தலைப்பை வைத்த விதத்திலேயே இந்த டீம் மக்கள் கவனத்தை ஈர்த்து விட்டது.

கதை:

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயைக்காப்பாற்ற 48 நாட்களுக்கு பிச்சைக்காரனாக மாறும் கோடீஸ்வரன் சந்திக்கும் இடர்ப்பாடுகள்.

ப்ளஸ்:

விஜய்ஆன்ட்டனி கோடீஸ்வரனாகவும், பிச்சைக்காரனாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகி சாட்னா டைட்டஸ் தான் காதலிப்பவர் பிச்சைக்காரன் என தெரிந்தும் அவரை வெறுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பு.

அம்மாவாக நடித்திருப்பவர் இயல்பான நடிப்பால் மனதைக்கவர்கிறார்.

ப்ளஸ்:

விஜய்ஆன்ட்டனி நடிப்பு+ இசை.

சசியின் வசனங்கள்.

பிச்சைக்காரனிடம் அடிவாங்கும் ரவுடி குரூப் காமெடி.

பிச்சைக்காரனுக்கு கேர்ள் ப்ரண்ட் இருப்பதைப் பார்த்து வெறுப்பாகும் ட்ராபிக் கான்ஸ்டபிள் காமெடி.

பாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவும் அருமை.

வசனங்கள்:

* ஏங்குறவன் கை எப்பவுமே ஓங்காது.

* பிச்சைக்காரன் தொட்ட போது அவனை அடித்த இன்ஸ்பெக்டர் அவனே கோடீஸ்வரன் என தெரிந்து மன்னிப்பு கேட்கும் இடத்தில்...
விஜய்ஆன்ட்டனி பேசும் வசனம்...

நான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்துருக்கேன் அப்போதெல்லாம் வருத்தப்படலை, ஆனா நான் பணக்காரன் தெரிஞ்சதும் என்னைத் தொடுற இந்த நேரம் பணக்காரனா இருக்க வெட்கப்படுறேன்...
சூப்பர் வசனம்...

இயக்குனர் மூர்த்தி வறுமையை ஒழிக்க 500, 1000 ரூபாயை ஒழிக்கனும்னு ஐடியா கொடுக்கும் வசனம் அருமை...

மொத்தத்தில் பிச்சைக்காரன் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற யதார்த்தமான படம்...

பிச்சைக்காரன் என்ற இந்த படத்தின் வெற்றியால் தொடர்ச்சியாக 4 படங்கள் வெற்றி அடைந்ததோடு, கோடீஸ்வரனாகவும் மாறிவிட்டார் விஜய்ஆன்ட்டனி....

#தட்சிணா...

No comments:

Post a Comment