Wednesday, 4 January 2012

மன அழுத்தத்தை போக்கும் சில வழிமுறைகள்

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் எனவே மன அழுத்தத்தில் இருந்து வாழ்க்கையை பாதுகாக்க சில வழிமுறைகள் ….

தேவையற்ற விவாதம் வேண்டாம்

மன அழுத்தம் ஏற்படுத்தும் சில சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது.

மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் காட்டு கத்தல் கத்தி துணையை அச்சுறுத்தக்கூடாது.

தனிமையை நாடுங்கள்

மனஅழுத்தமான சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்கள் துணைக்கும் நீங்கள் ஏன் டிஸ்டென்ஸ் மெய்ன்டெய்ன் செய்கிறீர்கள் என்று தெரியும்.வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள்

உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை லேசாக்கி உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி

கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள்

எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை

என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.




23 comments:

  1. ஜெய் ஜெகதாம்பா...
    ஓம் ஸ்ரீம் க்ரீம் பண்'னாய நமக...

    ஓம் சாந்தி.. சாந்தி சாந்தி சாந்தி...

    ReplyDelete
  2. லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்-மைனா

    ReplyDelete
  3. நன்றி.நீங்கள் குறிப்பிட்டிருந்தவகள் எல்லாம் நான் அறிந்தவைகள்தான்.அப்படியே கடைபிடித்தும் வருகிறேன். இருந்தாலும் மற்ற எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இது மிக அவசியமான அறிவுரை இன்றைய காலகட்டத்தில். வாழ்க வளர்க

    ReplyDelete
  4. குட் போஸ்ட்.. நல்லா இருக்கு நண்பா. இன்னைக்கு நிலைமைக்கு எல்லோருக்கும் தேவையான ஒன்று.

    ReplyDelete
  5. பாஸ் வோர்ட் வெரிபிகேசன் எடுத்து விடுங்க கமெண்ட் போடுருவங்களுக்கு ஈஸியா இருக்கும்.

    ReplyDelete
  6. am sorry boss!

    "நான் சொல்றேன் .. நீ கேளு " என்ற‌ ரீதியில் வ‌ரும் எந்த‌ ப‌டைப்புக‌ளும் என‌க்கு பிடிப்ப‌தில்லை. சில‌ருக்கு இது ப‌ய‌னுள்ள‌தாய் இருக்க‌லாம். என‌க்கு ஆல்ர்ஜி :))))

    ReplyDelete
  7. ஏண்டா பேமானி, இனி போஸ்டர் டுவிட்டர்ல கண்ட எடத்துல ஒட்டுன அப்புடியே கழிஞ்சிடுவேன் சாக்கிரத

    ReplyDelete
  8. பொதுவான குளோபல் ட்ரூத்களை தாண்டியும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் ;))

    ReplyDelete
  9. ஆல் இஸ் வெல்... மச்சி
    லவ் பன்ற எல்லாருக்கும்
    இது ஒரு நல்ல வழிகாட்டுதலா
    இருக்கம் மச்சி...
    நன்றி:-)

    ReplyDelete
  10. கட்டுப்படுத்துங்கள் என நீங்கள் கூறும் விஷயங்கள் யாவும் மன அழுத்தத்திற்கான மூலகாரணங்கள் அல்ல மாறாக அவை யாவும் அதன் பின்விளைவுகளே (symptoms) ஆகும். மூல காரணத்தை கண்டுபிடித்து அதைத் தீர்த்துவிட்டால் மன அழுத்தம் விலகி பின்விளைவுகளும் நீங்கிவிடும்.

    ReplyDelete
  11. பொதுவான கருத்துக்களாய் உள்ளது சகா, கொஞ்சம் மேம்படுத்துங்கள், எழுத்து நடை இயல்பாக உள்ளது. முடிந்த வரை தரவுகள் தரவும், என்ன செய்ய வேண்டும் என்பதை படிப்பவர்களே முடிவு செய்யட்டும். மேலும் தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  12. not bad..keep writing...,best wishes.;)

    ReplyDelete
  13. வாத்தியாரே பின்னிடீங்க போங்க :)) எனக்கு தேவையான பதிவு
    மிக்க நன்றி :))

    ReplyDelete
  14. பதிவு நன்றாக இருக்கிறது. மொத்த பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் வரிசையாக, குழப்பம் இல்லாமால் எழுதியிருக்கிறீர்கள். மேன் மேலும் ஆழமான கருத்துக்களுடன் எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. புரொஃபைல்ல கெமிஸ்ட்ரி படிச்சதா சொல்றீங்க, ஆனா சைக்காலஜில பின்றீங்களே, ம் ம் இருங்க படிச்சுட்டு வர்றேன்

    ReplyDelete
  16. புலவர் தருமி கமெண்ட் போட்டிருக்கார், உங்களூக்கு தெரியலைன்னு ட்விட்டர்ல சொன்னீங்களே?

    கமெண்ட் மாடரேஷனை தூக்கவும்

    டைட்டிலில் கிளாமர் பத்தாது ( அட்வைஸ் பண்ற மாதிரி மேட்டர் இருக்கலாம், ஆனா அட்ராக்ட் பண்ற மாதிரி டைட்டில் வேணும்)

    ReplyDelete
  17. மச்சி எழுத்துநடை அருமை... இது எல்லாமே எங்கயோ ஒரு சமயம் எதோ ஒரு இடத்துல படிச்சதாவே இருக்கும்... முடிந்தவரை பொதுவான விசயங்களை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  18. நல்லாயிக்கு... கலக்கு :D

    ReplyDelete
  19. மன அழுத்தத்தை போக்கும் சில வழிமுறைகள் உண்மையில் பாராட்டுகள் சிறப்பு தொடர்க

    ReplyDelete
  20. தாய்மனம்15 January 2012 at 11:42

    மனஅழுத்தம் # இன்றைய வாழ்க்கையில் அதிகம் பெயருக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு

    உங்கள் கட்டுரையில் அது மிக அழகாக எடுத்து எழுதப்பட்டு இருக்கு

    தொடருங்கள்

    ReplyDelete