Thursday, 26 January 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #1


பதிவுலகில் ஆயிரம் பதிவுகள் ! (மொக்கை போடுவதிலும் சாதனை ) வெளியிட்டு சாதனை படைத்த மொக்கை பதிவர் செந்தில்.சிபி உடன் நமது ட்விட்டர் நண்பர்கள் போட்ட மொக்கைகள் , மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் என்ற பதிவாக (மொக்கையாக) வெளியிடுகிறோம். மொக்கை கேள்விகள் கேட்ட நண்பர்களுக்கு அசராமல் தன் மொக்கை நடையில் பதிலளித்த சிபி க்கு நன்றிகள்....மொக்கையின் முதல் பாகம் இதோ !                                                                                                                                                    1.சி பி என்பதன் விளக்கம் ?

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி ( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C இனிஷியல்ல சேர்த்துட்டேன் .. ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )





. 2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்?

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம்





3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்..





4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?


பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில் 17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களூக்கும் எழுதி உள்ளேன்



5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?



களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.. ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்..



6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?



சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்..



7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?



எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி, மகள் என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்



8.அட்ராசக்க என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?



நான் கவுண்டமணி ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே பிலாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றா மொக்கை என திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ்



9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?



வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்..



10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?


நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள்

நன்றி ! ! !                                                                                                                           
அனைத்து ட்விட்டர் நண்பர்கள்.....                                                                              
 அட்ராசக்க வலைத்தளம்                                                                       
                                                                                                                                       தொடரும்....
                     
                                                                                                                     

28 comments:

 1. Replies
  1. நீங்க தான் முதல் நபர்...அன்புக்கு நன்றி சித்தப்பு....

   Delete
 2. சி.பி. செந்தில கேவளப்படுத்தனும்னு எத்தனை நாளாயா ப்ளான் பண்ணுன.

  அவர அழ விட்டு வேடிக்கை பாக்குறதுல ஒனக்கு அம்புட்டு ஆசை!

  பி.கு.: இன்னும் கொஞ்சம் கிள்ளிவிட்டு வேடிக்கை பாத்திருக்கலாம். அடுத்ததடவை அவரப்பத்தின கிசுகிசு பத்தி நெறைய கேளுயா!

  நல்லமுன்னேற்றம் தெரியுது ஓன் ப்ளாக்ல. அப்டியே புடிச்சு போயிரு!

  கீப் இட் அப்! என்சாய்!

  ReplyDelete
 3. :) அருமை... இதெல்லாம் உண்மைதானா... :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.....இன்னும் தொடரும்...

   Delete
 4. Good effort....congrats:)) @shanthhi

  ReplyDelete
 5. adra sakka podraa mokkai aaaga aaga good combination... innum neraya kelvi kelu machi by @gundubulb (twitter)

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய இருக்கு மச்சி !

   Delete
 6. சொந்த வாழ்க்கைய இப்டி மொக்கையொட சொல்றது..சொந்த காசுல சூன்யம் வச்சுக்கற மாத்ரி இருந்தாலும், எல்லாரையும் மகிழ்விக்கனும் நினைக்குற உங்க மனசுக்கு நன்றி..! இன்னும் டீடெயிலான இண்டர்வியு எதிர் பாக்குரொம்..! தருவீர்களா..நண்பரெ..நட்புடன் கட்டதொர..!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய இருக்கு மச்சி !

   Delete
 7. தாய்மனம்26 January 2012 at 23:26

  இது உண்மை பேட்டியின் பதிவா # இல்லை கற்பனையான பேட்டியின் பதிவா # எப்படி இருந்தாலும் # யாரையும் காயபடுத்தாத பதிவு # அதே நேரம் கலகலப்பான பதிவு # பயமில்லாத பாதகம் இல்லாத பலன்தரும் பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. உண்மையான பேட்டி தான் !
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா !

   Delete
 8. பாஸ்,
  நல்ல காமெடி....ரசித்தேன்...

  ReplyDelete
 9. good effort ...wishes for both..jokin

  ReplyDelete
 10. நல்லா இருக்குங்க :)) அவரின் பதில்களும், கேள்விகளும்.

  ReplyDelete
 11. அவரே டிவிட்டரில் எதிர் ட்வீட், பதில் ட்வீட், டைமிங் ட்வீட், மென்சன் இல்லாத லொள்ளு ட்வீட் இதிலெல்லாம் கில்லாடி. அவரிடமே கேள்விகளா ? நன்றாக இருக்கு தட்சிணா! வாழ்த்துகள் !!

  ReplyDelete
 12. நாட்டுக்கு நாலு நல்ல விஷயங்கள் ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா...அவருதான் மொக்கையப் போட்றார்ணா நீங்களுமா ?

  ReplyDelete
 13. பேட்டி நன்றாக இருக்கிறது. மேலும் தொடரட்டும் :)

  ReplyDelete
 14. அவரு உனக்கு என்ன பாவம்யா பண்ணாரு ?? எனக்கு ஒரு டவுட்டு - அது இன்னான்னா கேள்வி மட்டும் தான் அவரு பதில் எல்லாம் நீன்னு எனக்கு ஒரு மைல்டா ஒரு டவுட்டு இருக்கு !!! #மெய்யாளுமே செம பதிவு !!

  ReplyDelete
 15. அண்ணே அம்புட்டு நல்லவரா. ஹா ஹா. செம காமெடி. பெயர்விளக்கம் அட்டகாசம். சூப்பரோ சூப்பர். :)

  ReplyDelete
 16. மச்சி நம்ம c.p s மாதிரியே நெறையா பெரும்புள்ளிகளின் ரகசியங்களையும் அம்பலப் படுத்தவும், அருமையான முயற்சி வாழ்த்துகள் மச்சி

  ReplyDelete
 17. பக்காவான ஐடியா ,மேலும் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. எப்பயும் போல அட்ரா சக்கையின் காமிடி கும்மி தான் இதுவும் :-))

  ReplyDelete
 19. வணக்கம் நண்பரே,
  நானும் சிபி அவர்களின் ப்ளேட் ஜோக்குகள், காமெடி கும்மிகள், கலக்கல் விமர்சனங்களின் ரசிகன்,
  அருமையான பேட்டியினைத் தந்திருக்கிறீங்க.
  அடுத்த பாகத்தினை படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே....விரைவில் அடுத்த பாகம்.....

   Delete
  2. நல்ல பதிவு சகோ.
   மொக்கை - அப்பிடின்னா எங்க ஊர்ல பெரியன்னு அர்த்தம் உண்மையிலே சி‌பி அண்ணன் அது மாதிரி தான் எந்த ஒரு சூழ்நிலையையும் அவர் ரொம்ப நகைச்சுவையய் கையாளுவாரு உண்மையிலேயே அவர் கோபப்பட்டாலுமே அதை காட்டிக்கமாட்டாரு ரொம்ப நல்லவரு அவரோட கமெண்ட் எப்போதும் பிறரை கஷ்டப்படுத்துற மாதிரி இருக்காது . உண்மையில அவரு மொக்கை (பெரிய) பதிவர் தான்.

   Delete