Saturday 8 August 2015

இராமானுஜன் விருது 2015

இராமானுஜன் விருது 2005ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த விருது கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு, புகழ்பெற்ற கணிதமேதை இராமானுஜன் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

45 வயதுக்கு உட்பட்டவருக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது.

இத்தாலியைச் சார்ந்த நிறுவனமான ICTP, இந்தியாவைச் சார்ந்த DST, பன்னாட்டு அமைப்பான IMU, ஆகிய மூன்றும் சேர்ந்து இந்த விருதை வழங்குகின்றன.

2015 இராமானுஜன் விருது:
இந்தியரான அமலந்து கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப்பெறும் இரண்டாவது இந்தியர் கிருஷ்ணா.

முதல் இந்தியர்: சுஜாதா ராமதுரை
2006 ல் வென்றார்.

மொத்த பரிசுத்தொகை 15,000 அமெரிக்க டாலர்கள்.

மேலும் சில தகவல்கள்:

ICTP- INTERNATIONAL CENTRE FOR THEORETICAL PHYSICS, ITALY.

DST- DEPARTMENT OF SCIENCE & TECHNOLOGY. INDIA.

IMU- INTERNATIONAL MATHEMATICS UNION.

No comments:

Post a Comment