Sunday, 5 February 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #2
11.  நாங்க படத்துக்கு போய் படம் பிடிக்கலேன்னா, கடுப்பாகி வெளில போயிடுவோம் ? நீங்க எப்புடி ? கடைசி வரைக்கும்  உக்கார்ந்து பார்த்துட்டு தான் வருவிங்களா ? நினைச்ச எங்களுக்கே கஷ்டமா இருக்கு , மறைக்காம சொல்லுங்க உங்க அனுபவத்தை ?

நான் எந்தப்படத்தையும் முழுசா பார்க்க மாட்டேன், செம போர்.. முக்காவாசிப்படம் தான் பார்ப்பேன் ஹி ஹி .. ஏன்னா பெரும்பாலான படங்கள் இடைவேளை வரை தான் நல்லாருக்கும்.. அதுவும் இல்லாம கட் அடிச்சுட்டு படம் பார்க்கறதால. எந்தப்படத்தையும் முழுசா பார்க்க முடியாது, ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தா கிளம்பிடுவேன்..12. மொக்கை படத்துக்கு போய் பல்ப் வாங்குன அனுபவம் எதாவது ?

 ன்றா? இரண்டா? மொக்கைகள்.. என்னிடம் வந்து சேர்ந்தவை.. பல இருக்கு..13. திவுகள் வெளியிட்டுருக்கிறீர்கள் தெரியும் ? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?  -@sundaratamilan2

 ரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ ரெடி; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி..14. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?  by @NattAnu

 ல்ல, அதைப்பற்றி நான் சிந்திக்கலை..  நான் உள்ளே வந்தப்ப என் பிளாக் அலெக்ஸா ரேங்க் 18 லட்சம்.. அது 2 லட்சம் ஆக வர்ற வரைக்கும் அப்படி ஒரு நினைப்பு இல்ல. அதுக்குப்பிறகுதான் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.. இப்போ சவுக்கு தான் எனக்கு முன்னால இருக்கார்.. கேபிள்சங்கர், ஜாக்கி சேகர் எல்லாரையும் தாண்டிட்டேன்.. (இதை அடக்கத்துடன் சொல்லிக்கறேன்) தமிழ்மணம்ல 58 வாரங்கள் முதல் இடம் பிடிச்சேன், இண்ட்லில்  அதிக ஹிட்ஸ் பதிவுகள் போட்ட பதிவர்கள் லிஸ்ட்ல முதல் இடம், ஒவ்வொரு திரட்டிகளிலும் ஒரு தனி இடம் பிடிச்சிருக்கேன்..15. நீங்க பொண்ணுங்க போடுற மென்ஷனுக்கு மட்டுந்தான் ரிப்ளை பண்ணுவீங்களா தல.?

 ஹா ஹா டெயிலி நான் ரிப்ளை போடற அய்யனார், அறிவுக்கரசு, ஷேக்,  உட்பட பலரும் ஆண்கள் தான்.. நான் 1700 ஆண்களை ஃபாலோ பன்றேன் , அது யார் கண்ணுக்கும் தெரியாது.. 130 பெண்களை ஃபாலோ பண்ணுனா அதுதான் முதல்ல தெரியும்.. அது மனித மன இயற்கை.16. மீபத்துல பரபரப்பா பேசப்படுற பதிவுலக கோஷ்டிபிளவை பற்றி உங்கள் கருத்து என்ன.? பதிவர்கள் இரண்டு குருப்பா பிரிஞ்சு இருக்கறது உண்மையா.?

ய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட் போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும் வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா  கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!17. புதிய, வளரும் பதிவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன.?

ல்லாரும் நல்ல பதிவா போடுங்க.. என்னை மாதிரி லூஸ் தனமா , மொக்கை போஸ்ட் போடாதீங்க ஹி ஹி ... மற்ற பதிவர்கள் எந்த மாதிரி பதிவு போடறாங்கன்னு படிச்சுப்பாருங்க.. ஹாட் டாபிக் பற்றி போஸ்ட் போடுங்க.. அரசியல், சினிமா , நகைச்சுவை கலந்து இருக்கட்டும்.18. ந்துல யாரு..எவ்ளோ கலாய்ச்சாலும் டென்ஷனே ஆக மாட்றீங்களே.. எப்படி இந்த மனோநிலை.?

து பிளாக்ல எல்லாரும் என்னை தாக்கி, கலாய்ச்சு போஸ்ட் போட்டு எனக்கு பழக்கமாகிடுச்சு..  அதுவும் இல்லாம உப்பு கம்மியாதான் சாப்பாட்ல சேர்த்துக்குவேன் அதான்..  ( எனக்கு இயல்பாவே ரோஷம் கம்மி ஹி ஹி )19.  ல்லா படத்தையும் பாத்துட்டு விமர்சனம் பண்றீங்களே.உங்க வீட்டம்மா திட்ட மாட்டாங்களா.. தோராயமா சினிமாவுக்கு மட்டும் உங்க மாச பட்ஜெட் எவ்ளோ. ?   by @g4gunaa

ன் சம்சாரம் ரொம்ப நல்ல பொண்ணு, திட்ட மாட்டாங்க, வாரம் ஒரு தடவை உதைப்பாங்க ஹி ஹி....!!! வாரம் சராசரியா 3 படம் = 200 ரூபா மாசம் 12 படம்= 800 டூ 1000 ரூபா.!!!20. சங்க மென்ஷன் போட்டா மட்டும் ரிப்ளே பண்ண ரொம்ப நேரமெடுக்குறீங்களே!அவ்ளோ கஷ்டமான கேள்வியா கேக்குறோம்? by @rAguC

டங்கொய்யால, மென்ஷன் பார்க்கவே இப்போதான்யா கத்துக்கிட்டேன், இனி பாருங்க பின்னிடறேன்.!!!21. ப்பவும் கூலான ட்விட்ஸ் போடுறீங்களே அதுக்கு நீங்க போட்ருக்க கூலிங் க்லாஸ்தான் காரணமா?                   by @sesenthilkumar

மா, அதுவும் இல்லாம நான் கம்மங்கூழ், ராகிக்கூழ், சாப்பிட்டு உடம்பையும் மனசையும் கூலா வெச்சிருப்பேன் அதுவும்தான்.!!! ( வெளீல தனியா வாடி, உன்னை கவனிச்சுக்கறேன்... கலாய்க்கறியா ங்க்கொய்யால )22.   1000 பதிவுகளில் எதற்க்கேணும் -ve பின்னூட்டம் வந்துள்ளதா? ஆமெனில், அதை எவ்வாறு எடுத்துக்கொண்டீர்கள்? by @Thanda_soru

 துக்கு வர்லைன்னு கேளூங்க, நாம எந்த பதிவு போட்டாலும் அதுக்கு ஆப்போசிட்டா பேச ஒரு குரூப் ரெடியா இருக்கும், ஆனா விஜய்யை கலாய்ச்சு போஸ்ட் போட்டா மட்டும் ரெகுலரா 15 பேர் வந்து திட்டிட்டு போவாங்க, அவங்க இப்போ ரெகுலர் திட்டிங்க் கச்டமர்ஸ் ஆகிட்டாங்க ஹி ஹி அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும்.. ஜாலி கலாய்ப்பை ரசிக்கற மனோ பக்குப்வம் அவங்களூக்கு கம்மின்னு நினைச்சுக்குவேன். 23. நீங்க படுச்சது கணக்கா இல்ல கணக்கு பண்றதா ?  by @Butter_cutter

ண்ணே, உங்க அளவுக்கு நான் கணக்கு பண்ண முடியாதண்ணே.. அன்னைக்கு ஈரோடு புத்தக திருவிழாவுக்கு வந்தப்போ ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்தீங்க, என்னை பார்த்ததும் நைஸா அவங்களை ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல் பக்கம் நிக்க வெச்சுட்டு என்னை நைஸா கழட்டி விட்டுட்டு மறுபடி பார்ட்டியை பிக்கப் பண்ணிட்டு போனீங்களே, அதை நான் பார்த்துட்டேன்.. ஹி ஹி.!!! 24. சினிமா வசனங்களை எப்படி ஒன்று விடாமல் எழுதுகிறீர்கள் ?  ரெக்கார்டும் பண்ணலை ?  அப்புறம் எப்புடின்னு சொல்லுங்க சார் ?   by @gundubulb

 ல்லாம் பழக்க தோஷம் தான்... செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, ஆரம்பத்துல 10 ஜோக்ஸ் அல்லது வசனம் நினைவு வரும், போகப்போக டெவலப் ஆகிடும்..25. நீங்க வெற்றி பெற முக்கியமான மூன்று நல்ல குணம் எவை?

 
1. தையும் லைட்டா எடுத்துக்கற சுபாவம்.
2. கோ பார்க்காமல் எல்லோரிடமும் பழகுவது.
3. டுமையான உழைப்பு, எந்நேரமும் படைப்பு, ட்வீட்ஸ், போஸ்ட் என சிந்திப்பது..
.
.
.

தொடரும்...

19 comments:

 1. எப்பவும் கூலான ட்விட்ஸ் போடுறீங்களே அதுக்கு நீங்க போட்ருக்க கூலிங் க்லாஸ்தான் காரணமா? ; by @sesenthilkumar //கேள்வியும் கலக்கல் அதற்கு பதிலும் அருமை

  - @gundubulb(twitter)

  ReplyDelete
 2. யார் யார் என்ன கேள்வி கேட்டாங்கன்னு அவங்க பெயர், ஊர் போடவும், அப்போதான் எல்லாருக்கும் தெரியும், தொடர்ந்து கேள்வி கேட்க ஆர்வமாவும் இருக்கும், சிறந்த கேள்விக்கு வாரம் ஒரு நபருக்கு பரிசு தரவும் ஹி ஹி

  ReplyDelete
 3. இந்த வார கேள்விகளும் பதில்களும் அட்டகாசமாக இருந்தது!

  ReplyDelete
 4. என்ன தல பாதி மட்டும் சொல்றீங்க. அதுக்கு அப்புறம் நீங்களும் வந்து ....கண்டாம நாயக்கனூர் காரர் களங்கம் பண்ணின விஷயத்தையும் மக்களுக்கு சொல்லீருங்க !

  ReplyDelete
 5. இங்கு பெண்கள் யாருமே கேள்வி கேட்க்காதது அண்ணனுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும்! அதுக்கு தனிய ஒரு பதிவு போட்டு அவர் மனசை குளிர வைச்சிடு! தட்சிணா

  -rAguc

  ReplyDelete
 6. மொத்தம் எத்தனை பகுதிகள் அதயும் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமே ;)
  இன்னும் பேட்டி தவிற மற்ற கதைகளையும் அவ்வப்பொழுது எழுதலாமே???

  ReplyDelete
 7. இப்பத்தான்யா சூடுபிடிக்குது!

  ReplyDelete
 8. இப்படி ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா கேள்வி கேக்குற மாதிரி ஆயிடுச்சே உங்க நிலைமை !!!

  ReplyDelete
 9. ஆமாம் பிரபல டுவிட்டர் , டுவிட்டர்ன்கிறீங்களே !!! அப்ப பிரபல டுவிட்டர் ஆகனும்னா ஒரு கூலிங் கிளாஸ் , பொண்ணுங்களுக்கு மட்டும் ரிப்ளை பண்ணுனா போதுமா ?????

  ReplyDelete
 10. Nice interview, Naan ketta kelvilaam eppa varum, innum nalla elutha vaalthukal.

  ReplyDelete
 11. தாய்மனம்9 February 2012 at 07:05

  நான் பிளாக் பக்கம் போவது கிடையாது # அதனால் உங்க சாதனைகளை அறியாமலேஉங்களின் பதிவுகளால் கவரப்பட்டு தொடர்கிறேன் # நகைச்சுவை என்றுமே நிரம்பி இருக்கு அதில் நையாண்டியும் இருக்கு.
  நானும் உங்கள் வாசகர் வட்டத்துக்குள் என்பது எனக்கு பெருமையா இருக்கு.
  -
  இந்த சாதனையாளரின் சாதனைகளை # டுவிட்டுலக மக்களுக்கு புரிந்துணர்வு ஏற்படும் வகையில் ஒரு "உரத்த சிந்தனை தொடர் பதிவு" போட்ட இந்த பிளாக் சொந்தக்கரர் மனசு ரொம்பவே பெருசு.
  அடுத்தவர்களின் வளர்ச்சியில் ஆனந்தம் காணும் குணம் அற்புதமான மனசு உங்களுக்கு. கொடுத்து வைத்தவர்கள் உங்களை உறவாக கொண்ட மக்கள்

  ReplyDelete
 12. நல்ல பதில்கள் - அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம் - நன்றி

  ReplyDelete
 13. கேள்விகளும் பதில்களும் அருமை ..நன்றி

  ReplyDelete
 14. கேள்விகளும் அருமை அதற்கு வந்த பதில்களும் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. ஹி..ஹி.. வழக்கம்போல நான் சீரியஸா கேட்ட கேள்விகளுக்கும் சிரிச்சிக்கிட்டே பதில் போட்ருகீங்கண்ணே..
  அதான் தல :-)))

  ReplyDelete
 16. Nice Interview....சுவாரஸ்யமாவும் நல்லா காமெடியாவும் இருந்தது கேள்வி களும் பதில்களும் :))@shanthhi

  ReplyDelete
 17. @rAgucFeb 8, 2012 06:48 AM

  இங்கு பெண்கள் யாருமே கேள்வி கேட்க்காதது அண்ணனுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும்! அதுக்கு தனிய ஒரு பதிவு போட்டு அவர் மனசை குளிர வைச்சிடு! தட்சிணா


  அடிங்கொய்யால, எங்களுக்குத்தெரியும்யா.. இந்த மாதிரி கமெண்ட்ஸ் வரும்னு.. அதனால தான் லேடீஸ் கேள்விகளுக்கு ஆரம்பத்துலயே பதில் சொல்லாம ஆண்கள் கேல்விகளுக்கு முதல்ல பதில் சொன்னேன், ஏன்னா அவங்க கேள்விகளுக்கு முதல்ல பதில் சொன்னா ஜொள் பார்ட்டி அப்டினு சொல்றதுக்கு ட்விட்டர்ல 13 பேர் காத்துட்டு இருக்காங்க .. நாங்க எத்தனை பேர்ட அடி வாங்கி இருக்கோம்? ஹி ஹி

  ReplyDelete
 18. நல்ல முயற்சி ...
  @Vembaikrishna

  ReplyDelete
 19. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  Best Regarding.

  ReplyDelete