Saturday, 18 February 2012

விமர்சனத்தில் சொதப்புவது எப்படி.?

காதலில் சொதப்புவது எப்படி.?

திரை விமர்சனம்


*காதலில் சொதப்புவது எப்படி? என்ற 8 நிமிட குறும்படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்த  பாலாஜிமோகன் அதை 2 மணிநேர படமாக உருவாக்கி  அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்….

*அறிமுக இயக்குநர் பாலாஜி மோகனுக்கு வாழ்த்துக்கள், சிறப்பான படைப்பைத்
தந்ததற்காக.!

*யூட்யூப் இணையத்தில் லட்சோபலட்சம் நபர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட படம் என்பதால் இயக்குநர் மீது எதிர்பார்ப்பு அதிகம். எதிர்பார்ப்பை பொய்யாக்காத இயக்குநருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

கதை:

*காதல் படங்களில் கதை என்ற  ஒன்றை எதிர்பார்க்கக் கூடாது.இதிலும் அப்படித்தான். இசிஇ படிக்கும் மாணவர் அருணாக சித்தார்த், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி பார்வதியாக அமலாபால், இவர்களின் காதல் சொதப்பல்கள்தான் கதை.

*காதலியை சந்தித்தது, காதலில் சொதப்பியது, என அனைத்தையும் சித்தார்த்
ப்ளாஷ்பேக்காக சொல்கிறார்.  பிரிந்த காதலர்கள் எதனால் பிரிந்தார்கள், இறுதியில் என்ன ஆனார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

*சித்தார்த், அமலாபால், காதலுக்கு நடுவே நண்பர்களின் காதல், பெற்றோர்களின் காதல் என அனைத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார்  பாலாஜிமோகன்.

ஒளிப்பதிவு:

*நீரவ்ஷா தன் கேமரா மூலம் இந்த படத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அமலாபாலின் தந்தை சுரேஷின் பஜாஜ் ஸ்கூட்டர், சித்தார்த், அமலாபாலின் மொபைல் போன் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட அழகாகக் காட்டுகிறது நீரவ்ஷாவின் கேமரா. ஸோ க்யூட் ஒளிப்பதிவு…!!!

இசை:

*தெலுங்குப் படங்களுக்கு மட்டுமல்ல தமிழ்ப் படங்களுக்கும் தன்னால் தரமான இசையைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தமன்.S.

*பின்னணி இசையும் சூப்பர். பார்வதி மற்றும் அழைப்பாயா,  தவறுகள் உணர்கிறோம், ஆனந்த ஜலதோஷம் என பாடல்கள் சூப்பர். வாழ்த்துக்கள் மதன்கார்க்கி.

ஹைலைட்ஸ்:

*சித்தார்த்-அமலாபால் கெமிஸ்ட்ரி.

*குறும்படத்தில் நண்பர்களாக நடித்தவர்களையே இதிலும் அதே ரோலில் நடிக்க
வைத்திருப்பது…

*சித்தார்த்தின் நண்பராக வரும் சிவா அசத்தியிருக்கிறார், இனி நிறைய
வாய்ப்புகள் தேடிவரும் அவரை…

*ஹீரோ, ஹீரோயின் இவர்களின் பெற்றோர் மற்றும் அவர்கள் காதலை அழகாக சொன்ன விதம்…

*லொக்கேஷன், இசை, ஒளிப்பதிவு, காஸ்ட்யூம்ஸ் என அனைத்தும் சிறப்பு…..

ரசனைமிகுந்த காட்சிகள்:

*சித்தார்த் ப்ளாஷ்பேக்கில் காதலை விவரிப்பது…..

*அமலாபாலிடம் போன் நம்பர் வாங்கும் காட்சி…

*நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி…

*அமலாபாலிடம் சித்தார்த் அப்பா துணிக்கடையில் பேசுவது…

*அமலாபாலின் அப்பா சுரேஷின் காதல் எபிசோட், குறிப்பாக மகளிடம் லவ் லெட்டர் கொடுத்தனுப்புவது, அதை அவர் மனைவி படித்து மகிழும் போது அவரின் எக்ஸ்பிரஷன் அழகு…

*சுரேஷ் காதலுக்கு "வளையோசை பாடலை பேக்ரவுண்ட்ல யூஸ் பண்ணுவது...

*லெட்டரை அம்மாகிட்ட கொடுத்துடும்மான்னு சுரேஷ் அமலாபால்கிட்ட கொடுத்துட்டுப் போகும் போது மரத்திலிருந்து பூ விழுவது போன்ற காட்சிகள் ஸோ க்யூட்…

*சித்தார்த் அமலாபால்கிட்ட லவ் சொல்லும் போது, "இதை சொல்ல உனக்கு இவ்ளோ நாளாச்சா" ன்னு அமலாபால் கேட்கும் இடம் சூப்பர்…

*இயக்குனர் தலை காட்டும் காட்சிகள்… வசனங்கள்.... அனைத்தும் சூப்பர்.!!!!
ரிசல்ட்:

*எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய நல்ல பொழுதுபோக்கான படம், குறிப்பாக காதலர்களும், சண்டைபோட்டு பிரிந்தவர்களும்….

*ஈகோவை விரட்டுனா லவ்ல எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு சொல்லிருக்கார் இயக்குனர்….நல்ல மெசேஜ்…….

*சொதப்பாமல் படம் எடுப்பது எப்படின்னு பாலாஜிமோகன் நிரூபித்துவிட்டார்….
ஹேட்ஸ் ஆஃப் பாலாஜிமோகன்…

*குமுதம், ஆனந்தவிகடன் விமர்சனத்தை எல்லாம் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க,

*KSY-ன் நல்ல விமர்சனம் படிக்கணுமா?.

*செந்தில் சி.பி யோட அட்ராசக்க ப்ளாக் பக்கம் போங்க.. விமர்சனத்தை விலாவாரியா படிங்க…
*படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க… பண்ணுவீங்க…

*சினிமா சினிமா சினிமா*
adrasaka.blogspot.com

.
.
.

19 comments:

 1. அழகான விமர்சனம் தக்ஷிணா. விமர்சனத்தில் சொதப்புவது எப்படினு தலைப்பு இருந்தாலும் ஒரு சொதப்பலும் இல்லாத விமர்சனம் இது. பாராட்டுவதும் ஒரு அழகுதான். திகட்டாமல் பாராட்டியிருக்கிறீர்கள். எழுத்தைப் போலவே உண்மை மிளிரும் விமர்சனம் இது. வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி பத்மினி அவர்களே...!!!!

   Delete
 2. விமர்சனத்தில் சொதப்புவது எப்படினு நீங்களே போட்டுட்டா நாங்க எப்படிப்பா கலாய்க்கறது..? என்றாலும் நல்ல விமர்சனமே இது.!!! :)

  ReplyDelete
  Replies
  1. எப்படிப் போட்டாலும் கலாய்ப்பீங்கனுதான் தெரியுமே எங்களுக்கு.! நன்றி மீன்ஸ்.!!!

   Delete
 3. கலக்கல் விமர்சனம்பா.!
  சூப்பர்.!
  சூப்பர்.!!
  சூப்பர்.!!!

  ReplyDelete
 4. படத்தைப் போலவே விமர்சனமும் க்யூட் :)

  ReplyDelete
 5. தலைப்பே அருமை இந்த தலைப்பு தான் என்ன இங்க கொண்டு வந்திருக்கு .. அருமையான எழுத்து நடை ..அப்ப படம் பாக்கலாம் ன்னு சொல்றீங்க.. by gundubulb (twitter)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாக்கலாம். கருத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி ப்ரதர்.!!!

   Delete
 6. நல்ல விமர்சனம் - கொஞ்சம் CPS பாணியில் இருக்கு ... @sweetsudha1

  ReplyDelete
  Replies
  1. அவர்தான் மேடம் இன்ஸ்பிரேஷனே. வரும்காலங்களில் தனித்துத் தெரிய முயற்சி செய்கிறேன். அக்கறைக்கு நன்றி மேடம்.!!!

   Delete
 7. காதலில் சொதப்புவது எப்படி என அவர் சொதப்பியதை காட்டினாலும் ; விமர்சனத்தில் சொதப்பாமல் சொதப்பியது எப்படி என எழுதி ஈர்க்கிறீர்கள் . நன்றி அருமை. விரைவில் படத்தை பார்க்கிறேன் get2karthik (twitter)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா.!!! உங்க அம்புலி விமர்சனம் கூட அற்புதமாய் வந்திருக்கு. வாழ்த்துகள்...!!!

   Delete
 8. தம்ப்ரீ! சொந்தமா ஒரு ஸ்டைல வச்சிக்க(ஈவன் அது பவர்ஸ்டார் மாதிரி இருந்தாலும் பரவாயில்லை) தெரிஞ்சத எழுது. செந்தில்சிபிய காப்பி அடிக்காத.

  தப்பு தப்பான்னாலும் சொந்தமா எழுதி பழகுடா.

  உன் எழுத்துல ஒரு பயம் தெரியுதே? எழுதி தப்பானா நல்லவங்கிற பேரு கெட்டுரும்னு நினைக்கிறியா?

  விட்டுத்தள்ளு.

  அடுத்த ப்ளாக்பேஜ் சொந்தமா எழுதுர! ஓகே!

  என்சாய்!

  ReplyDelete
  Replies
  1. தைரியம் கொடுத்ததுக்கு நன்றி தல. கண்டிப்பா இனி தைரியமா எழுதி தனியாத் தெரிய முயற்சி செய்யறேன்.! நன்றிகள் கோடி.!!!

   Delete
 9. அட்ரா சக்க பாணியில் சினிமா விமர்கனம் நல்ல முயற்சி மென்மேலும் வளர்க

  ReplyDelete
  Replies
  1. இனிமே நீங்க அட்ராசக்கனு சொல்ல வைக்கறா மாதிரி எழுதுறேன் பாருங்க...!!! நன்றி.!!!

   Delete
 10. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  Best Regarding.

  ReplyDelete