காதலில் சொதப்புவது எப்படி.?
திரை விமர்சனம்
*காதலில் சொதப்புவது எப்படி? என்ற 8 நிமிட குறும்படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்த பாலாஜிமோகன் அதை 2 மணிநேர படமாக உருவாக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்….
*அறிமுக இயக்குநர் பாலாஜி மோகனுக்கு வாழ்த்துக்கள், சிறப்பான படைப்பைத்
தந்ததற்காக.!
*யூட்யூப் இணையத்தில் லட்சோபலட்சம் நபர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட படம் என்பதால் இயக்குநர் மீது எதிர்பார்ப்பு அதிகம். எதிர்பார்ப்பை பொய்யாக்காத இயக்குநருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.
கதை:
*காதல் படங்களில் கதை என்ற ஒன்றை எதிர்பார்க்கக் கூடாது.இதிலும் அப்படித்தான். இசிஇ படிக்கும் மாணவர் அருணாக சித்தார்த், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி பார்வதியாக அமலாபால், இவர்களின் காதல் சொதப்பல்கள்தான் கதை.
*காதலியை சந்தித்தது, காதலில் சொதப்பியது, என அனைத்தையும் சித்தார்த்
ப்ளாஷ்பேக்காக சொல்கிறார். பிரிந்த காதலர்கள் எதனால் பிரிந்தார்கள், இறுதியில் என்ன ஆனார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
*சித்தார்த், அமலாபால், காதலுக்கு நடுவே நண்பர்களின் காதல், பெற்றோர்களின் காதல் என அனைத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார் பாலாஜிமோகன்.
ஒளிப்பதிவு:
இசை:
*பின்னணி இசையும் சூப்பர். பார்வதி மற்றும் அழைப்பாயா, தவறுகள் உணர்கிறோம், ஆனந்த ஜலதோஷம் என பாடல்கள் சூப்பர். வாழ்த்துக்கள் மதன்கார்க்கி.
ஹைலைட்ஸ்:
*சித்தார்த்-அமலாபால் கெமிஸ்ட்ரி.
*குறும்படத்தில் நண்பர்களாக நடித்தவர்களையே இதிலும் அதே ரோலில் நடிக்க
வைத்திருப்பது…
*சித்தார்த்தின் நண்பராக வரும் சிவா அசத்தியிருக்கிறார், இனி நிறைய
வாய்ப்புகள் தேடிவரும் அவரை…
*ஹீரோ, ஹீரோயின் இவர்களின் பெற்றோர் மற்றும் அவர்கள் காதலை அழகாக சொன்ன விதம்…
*லொக்கேஷன், இசை, ஒளிப்பதிவு, காஸ்ட்யூம்ஸ் என அனைத்தும் சிறப்பு…..
ரசனைமிகுந்த காட்சிகள்:
*அமலாபாலிடம் போன் நம்பர் வாங்கும் காட்சி…
*நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி…
*அமலாபாலிடம் சித்தார்த் அப்பா துணிக்கடையில் பேசுவது…
*அமலாபாலின் அப்பா சுரேஷின் காதல் எபிசோட், குறிப்பாக மகளிடம் லவ் லெட்டர் கொடுத்தனுப்புவது, அதை அவர் மனைவி படித்து மகிழும் போது அவரின் எக்ஸ்பிரஷன் அழகு…
*சுரேஷ் காதலுக்கு "வளையோசை பாடலை பேக்ரவுண்ட்ல யூஸ் பண்ணுவது...
*லெட்டரை அம்மாகிட்ட கொடுத்துடும்மான்னு சுரேஷ் அமலாபால்கிட்ட கொடுத்துட்டுப் போகும் போது மரத்திலிருந்து பூ விழுவது போன்ற காட்சிகள் ஸோ க்யூட்…
*சித்தார்த் அமலாபால்கிட்ட லவ் சொல்லும் போது, "இதை சொல்ல உனக்கு இவ்ளோ நாளாச்சா" ன்னு அமலாபால் கேட்கும் இடம் சூப்பர்…
*இயக்குனர் தலை காட்டும் காட்சிகள்… வசனங்கள்.... அனைத்தும் சூப்பர்.!!!!
ரிசல்ட்:
*ஈகோவை விரட்டுனா லவ்ல எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு சொல்லிருக்கார் இயக்குனர்….நல்ல மெசேஜ்…….
*சொதப்பாமல் படம் எடுப்பது எப்படின்னு பாலாஜிமோகன் நிரூபித்துவிட்டார்….
ஹேட்ஸ் ஆஃப் பாலாஜிமோகன்…
*குமுதம், ஆனந்தவிகடன் விமர்சனத்தை எல்லாம் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க,
*KSY-ன் நல்ல விமர்சனம் படிக்கணுமா?.
*செந்தில் சி.பி யோட அட்ராசக்க ப்ளாக் பக்கம் போங்க.. விமர்சனத்தை விலாவாரியா படிங்க…
*படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க… பண்ணுவீங்க…
*சினிமா சினிமா சினிமா*
adrasaka.blogspot.com
.
.
.
*படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க… பண்ணுவீங்க…
*சினிமா சினிமா சினிமா*
adrasaka.blogspot.com
.
.
.
