Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Friday, 16 January 2015

டார்லிங்- டக்கரு விமர்சனம்

பேய் சினிமா ட்ரண்டில் இன்னொரு படம், த்ரில்லிங், காமெடி, எமோஷன்ஸ், யதார்த்தமாக கலந்த கலவை
"டார்லிங்"

கதை:

தற்கொலை செய்ய முடிவெடுத்து பண்ணை வீட்டுக்கு வரும் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ரானி, பாலா, கருணாஸ், ஆகியோர் சந்திக்கும் பிரச்சினைகள் பேய், த்ரில்லர், காதல், இதுதான் டார்லிங்....

ஏற்கனவே பண்ணை வீட்டில் தங்கிட வந்த ஜோடி கொல்லப்படுகின்றனர், அந்த பெண்ணின் ஆவி கதாநாயகி உடலில் புகுந்து கொண்டு படுத்தும்பாடு தான் படம்

திரைக்கதை தான் படத்தின் பெரும்பலம். காமெடி + த்ரில்லர் மசாலா கலந்து வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆன்டன்.

பலம்:

* ஜி.வி.பிரகாஷ்குமாரின் யதார்த்த நடிப்பு.

ஹீரோயினை தொட்டாலே பேய் வரும்னு தெரியும் போதும், அது தெரிஞ்சே தொட்டு பேயை வரவைக்கும் போதும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பிரகாசிக்கிறார்.

* நிக்கி கல்ரானி:

பச்சமண்ணுடா இவனு ஒருத்தர் மாத்தி ஒருத்தரா சொல்லி, கடைசில பேயா மாறும்போதும் அடிக்கும் போதும் பட்டைய கிளப்புது பொண்ணு.

* கருணாஸ்:

செம ரீ என்ட்ரி  கருணாஸ்.
பாலா கூட சேர்ந்து அடிக்கிற காமெடி லூட்டி.
சூப்பர் கருணாஸ்...

பாலா:

பண்ணையாரும் பத்மினியும் படத்துல பீடையா நடிச்ச பாலா டார்லிங் படத்தோட பெரிய ப்ளஸ்.
பச்சைமண்ணுடா இவனு சொல்லும் போது தியேட்டர்ல சத்தம் தெறிக்குது.

மொட்டை ராஜேந்திரன்:

டெக்னாலஜி மந்திரவாதி, பேய் கூட ஸ்கைப் வீடியோ சாட், ஐயம் வெய்ட்டிங் துப்பாக்கி டயலாக்னு மொட்டை பட்டைய கெளப்புது.

வசனங்கள்:

சாம் ஆன்டன் தன்னுடைய திரைக்கதை மற்றும் காமெடி வசனங்கள் மூலம் கலக்கிட்டார்.

# சாவுக்கு எதுக்குடா ஷாப்பிங்

#பச்ச மண்ணுடா அவ.

#என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..
(சொல்வதெல்லாம் உண்மை டயலாக்)

#நாங்க பன்னிங்க தான், நீங்க உள்ளே என்ன பண்ணீங்க.

#கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கப்போறேன்.
(லிங்குசாமி)

சமீப நிகழ்வுகள் அனைத்தையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.

பவர்ஸ்டாரை கூட விட்டுவைக்கலை.

படத்தின் ஒரே நெருடல் சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் தான், நல்லாவே இருந்தாலும் பாடல்கள் வேகத்தடை.

மொத்தத்தில் டார்லிங் பொங்கலுக்கு செம ட்ரீட்டு...

சங்கர் படம் செம லெங்த்தா இருக்கு, சுந்தர்.சி படம் சுமாரா இருக்குனு பீல் பண்ணாம டார்லிங் பாருங்க டக்கரா இருக்கு...

என்ஜாய் பண்ண ஏற்ற எண்டர்டெய்னர்.
பேய் ஹிட்...